Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. 14¹/² லட்சம் பயணிகள் பயணம்…. அமைச்சர் தகவல்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகளில் 14,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்லும் அங்கிருந்து மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முதல்வர் ஆணையிட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் 28,844 பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலமாக14, 24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 1,57,000 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் மூலமாக 8 கோடியே 37 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு நாளைக்கு கூடுதலாக 3,705 தினசரி பேருந்துகளும், 83 சிறப்பு பேருந்துகளும், 64,00,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 12 கோடி ரூபாய் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பின்னர் கடந்த 5 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 15,903 தினசரி பேருந்துகளும், 519 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக 74 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் சென்ற ஆண்டை விட கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்தில் பயணிகள் பயணம் செய்ததன் மூலமாக 7 கோடியே 39 இலட்சம் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |