வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பாண்டியராஜன் தனது நண்பர்களான பாலகிருஷ்ணன், அருண்குமார், ராஜதுரை, சங்கிலி குமார், ராஜபாண்டி ஆகியோரின் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது கண்ணன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் பாண்டியராஜனின் இருசக்கர வாகனம் மீது மோதியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து பாண்டியராஜன் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது தனது நண்பர்களுடன் அங்கு வந்த கண்ணன் பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்களை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதனை தட்டிக் கேட்ட அருண்குமாரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலூர் பகுதியில் உள்ள ஸ்டுடியோவில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்த அருண்குமார் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.