நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.அதேசமயம் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். எனவே அவர்களின் பயண வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில் பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரயில் சேவைகள் இயக்கப்படும்.இதற்கு முன்பு 179 ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட சேவையை சேர்த்து மொத்தம் 211 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும். அதன்படி 2561 முறை ரயில் சேவை இயங்கும். நாடு முழுவதும் முக்கிய பகுதிகளை இந்த சிறப்பு ரயில்கள் இணைக்கும் வகையில் சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.