மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வேட்டைக்காரன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக ஸ்கூட்டரில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மவுலீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதில் தினேஷ் எலக்ட்ரீசியனாகவும், மவுலீஸ்வரன் டிராக்டர் கம்பெனியில் ஊழியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு செலவு செய்ய கையில் பணம் இல்லாததால் மூதாட்டியின் தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்ததும் உறுதியானது. இதனை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து தங்க சங்கிலியை மீட்டனர்.