சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் தங்க நகையை கொடுக்கவில்லை.
இதனால் மோசடி செய்த ஜோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பெரியபாளையம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.