Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து…. அலைமோதும் கூட்டம்…. போக்குவரத்துத்துறை தகவல்….!!

தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இருந்து தொடங்கி விட்டனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்துகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் நாளை வரை சென்னையில் இருந்து 9806 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற ஊர்களில் இருந்து 6734 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனைப்போலவே  தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோர் வசதிக்காக 5 முதல் 8 ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் 2500 பேருந்துகளுடன் 4319 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற ஊர்களில் 5000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை தகவலின் படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் நேற்றைய நிலவரத்தில் சென்னையில்  2488 சிறப்பு பேருந்துகளில் 89,932 நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை  97,717 பயணிகள் முன்பதிவு செய்து பயணம்  செய்துள்ளனர் என்று  தெரிவித்துள்ளது.

Categories

Tech |