நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. மும்பை சென்ட்ரல் டிவிஷனில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டணம் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அவனுக்கு வருகிறது.
மும்பை சென்ட்ரல், தாதர், பொரிவழி,உத்ரா மற்றும் சூரத் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுக்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பண்டிகை காலத்திற்காக 32 சிறப்பு ரயில் சேவைகளை தொடங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.கடந்த அக்டோபர் 4ம் தேதி 179 சிறப்பு சேவைகளை ரயில்வே வழங்கியது. தெற்கு ரயில்வே 22 சிறப்பு ரயில்களைப் பயன்படுத்தி 56 பயண சேவைகளை வழங்கியது.