மருந்து குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் 2-வது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் இருக்கிறது. நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சனிடைசர், மாஸ்க், கையுறை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.