நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பல நிறுவனங்களும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படவுள்ள நிலையில் திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடைகளில் விவரங்களை இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.