Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!…. 6,852 சிறப்பு பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு சொந்தஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக 17,440 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக இன்று இரவு முதல் 26 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 6,852 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Categories

Tech |