Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க…. “2 மணி நேரம் மட்டும் அனுமதி” சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மக்கள் பட்டாசு வெடித்து, பலகாரங்களை செய்து சந்தோசமாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளி அன்று காலையிலிருந்து இரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்த  இயற்கை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் 2018ம் வருடம் பொதுநல வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, போன வருடம் 2018 அன்று மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதே போல இந்த ஆண்டும் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காலை ஆறு மணியிலிருந்து 7 மணி மற்றும் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |