தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு 3,000 மற்றும் 1,000 என்ற பரிசு கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 3000 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் .
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை வேட்டி சேலைக்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.