Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு ரிலீஸாகும் விஷாலின் ‘எனிமி’… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் எனிமி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |