நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும் ஏராளம். ஆனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. சாதாரண நாட்களை விட மற்ற பண்டிகை நாட்களில் சைடில் டிக்கெட் கிடைப்பது சிரமம்தான்.பொதுவாக ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்ய வேண்டும். ஒரு வாரம் முன்னர் அல்லது சில நாட்களுக்கு முன்னர் டிக்கெட் புக்கிங் செய்தால் கிடைக்காது. இருந்தாலும் தட்கல் டிக்கெட் வசதியில் ஒரு நாளுக்கு முன்பு கன்ஃபார்ம் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
கன்ஃபார்ம் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?
அதற்கு முதலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மாஸ்டர் லிஸ்ட் முன்கூட்டியே தயார் செய்து வைக்க வேண்டும். மாஸ்டர் லிஸ்ட் என்பது ரயில் பயணிகளின் பெயர் மற்றும் வயது உள்ளிட்டு அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்து சேமித்து வைப்பது தான்.
தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஏசி வகுப்பு 10 மணிக்கு சாதாரண ஸ்லீப்பர் கோச் பதினோரு மணிக்கு திறந்திருக்கும்.
புக்கிங் செய்யும்போது எந்த சீட் வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.
இந்த முறையில் நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்தால் கன்பார்ம் டிக்கெட் உங்களுக்கு கிடைக்கும்.