Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊரில் தெரியுமா?…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, பைபாஸ்,மாநகராட்சி பேருந்து நிலையம் மற்றும் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு 6370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

Categories

Tech |