Categories
சினிமா தமிழ் சினிமா

தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார்.

தற்போது சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது யூடியூப் தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |