ஜெர்மனியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்தில் வெடிகுண்டு பார்சலால் 3 பேர் காயமடைந்துள்ளனர் .
ஜெர்மனியில் நெக்கர்சுல்ம் என்ற நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்திற்கு பார்சல் ஓன்று நேற்று வந்துள்ளது. அந்த பார்சலில் வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது.வெடிகுண்டு வெடித்ததில் அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு ரொம்ப மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கட்டிடத்தில் இருந்த 100 பேரை வெளியேற்றினார்கள். ஏற்கனவே இதே போல் கடந்த செவ்வாயன்று எப்பெல்ஹெய்ம் இடத்திலும் ஒரு வெடிகுண்டு பார்சல் வந்துள்ளது. எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம். மேலும் இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .