திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பாறையை தகர்க்க வைத்த வெடி பயங்கரமாக வெடித்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒரு தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் அந்த பாறையை தகர்ப்பதற்க்கு எந்த வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் பணி மேற்கொண்டவர்கள் பாறையில் வெடி வைத்து வெடிக்க செய்தனர்.
இதில் பெரிய கல் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மீது விழுந்தது. இதனால் ஆட்டோ ஓட்டுனர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும் கல் விழுந்ததில் படுகாயம் அடைந்தார் . உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .