Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு… தனுஷ் எப்போது சென்னை திரும்புவார்?…!!!

நடிகர் தனுஷ் நடித்து வந்த ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

In Pics: Dhanush begins shooting for 'The Gray Man' in California | The  News Minute

இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றிருந்தார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடிகர் தனுஷ் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |