தி கிரேட் இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது .