Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு வலதுகரை கால்வாய்…. தூர்வாரும் பணிகள் பாதிப்பு…. விவசாயிகள் கோரிக்கை…!!

மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை, முழுக்கோடு வழியாக பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயை சரியான முறையில் பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கால்வாயை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாயில் மண் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் தூர்வாரும் பணி பாதிக்கப்பட்டு, தண்ணீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |