திற்பரப்பில் சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது.
பிரபல சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகின்றது குமரி. இதில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் அவ்வபோது சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புறிந்தனர். மேலும் அங்கு குளித்து மகிழ்ந்தார்கள்.
தற்பொழுது நீர்வரத்து கோதை ஆற்றில் மிதமாக பாய்வதால் அருவியின் மேற்பகுதியில் இருக்கும் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் இருக்கின்றது. மேலும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த பின்னர் தடுப்பணைக்கு சென்று படகு சவாரி சென்று மகிழ்கின்றார்கள். நேற்று திற்பரப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமானதால் களைகட்டியது.