திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்காக சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளை பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார்கள் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள்.
அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா? மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த அறிவாலயம் அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த @arivalayam அரசின் நடவடிக்கையை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. (3/3)
— K.Annamalai (@annamalai_k) September 21, 2022