திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே புரோட்டா கல் போட்டு உணவு தயாரித்தது தெரியவந்தது. இதனை அடுத்து புரோட்டா கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர்.