Categories
தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்கலாம்… ஆனால் இதனை… கட்டாயம் செய்ய வேண்டும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திரையரங்குகளை வருகின்ற 15ஆம் தேதி முதல் பிறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வருகின்ற 15ஆம் தேதி குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, “திரையரங்கு முழுவதிலும் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கை முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளியை விட்டு அனைவரும் அமர வேண்டும். பாக்கெட்கள் மூலமாக அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மேலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |