நாடு முழுதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழ்நிலை கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கையே முடங்கி போனது. இதனையடுத்து படிப்படியாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததால் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்ப்போது மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது.
அந்தவகையில் கோவாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி, 2 டோஸ் தடுப்பூசி, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.