வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 1ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ் மாஸ்டர்மான கனல் கண்ணன் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது . இதனால் அவர் மீது சென்னை காவல்துறை வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளது.