Categories
மாநில செய்திகள்

திருவோடு வாங்கி கொடுங்க!… பிச்சை எடுக்கிறேன்!…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்….!!!!

பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை 3  பேருந்துகளில் தன் பக்தர்களுடன் காவல் நிலையத்திற்கு பாஸ்கரானந்தா வந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் ஏன் நீங்கள் இவ்வளவு கூட்டத்தை விசாரணைக்கு அழைத்துவந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது சாமியார் கூறியதாவது, திருவோடு வாங்கி கொடுங்கள் பிச்சையெடுக்கிறேன். தன் வாழ்க்கையே பாதிக்கப்பட்டதாக தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதன் காரணமாக சாமியாரை சுற்றியிருந்த பக்தர்கள் கலக்கமடைந்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் பக்தர்கள் அனைவரையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்து, சாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர்.


Categories

Tech |