திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர்.
இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின் சாமியை முக்கிய வீதி வழியாக வந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.