திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா உட்பட 1050 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், மின்வாரிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி இன்றி 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யதனர்.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, திமுக மாவட்ட இளைஞர் அணி ரஜினி ஜின்னா உள்ளிட்ட 1056 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் நான்கு, மாதங்களாக வேலை இல்லாத சூழலில் மின் கட்டண உயர்வு மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கோசம் எழுப்பினர்.