திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற நாள் முதலே பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்தது. இவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது தந்தை பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பின்னர், அங்கு கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி மதிப்பில் உருவான தாய்-சேய் சிறப்பு பிரிவு புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடியில் 4 அறுவை சிகிச்சை மையம், 250 படுக்கை வசதிகளுடன் தாய்சேய் நல பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் காட்டூரில் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு அதன் காரணமாக அந்த மாவட்ட ஆட்சியர் காயத்ரிக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.