திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று… என்றுமே இல்லாத அளவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 300 என்ற அளவிலே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 300க்கும் சற்று கீழே இருந்த நிலையில் இன்று அதிகப்படியாக எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது மக்களை திணறடித்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பாக 8ஆயிரத்தை கடந்து… 8048 என்ற உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பார்க்கும்போது சென்னையை ஒட்டி இருக்கக் கூடிய பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதியில் தான் அதிகளவு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் 80 பேருக்கும், ஆவடியில் 52 பேருக்கும், ஆர்கே பேட்டை 35 பேருக்கும், பூண்டியில் 34 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுவரை 4 ஆயிரத்து 335 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 134 பேர் உயிரிழந்துள்ளனர்.