Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருவள்ளூரில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”… தலைமை தாங்கிய ஆட்சியர்….!!!!!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஓய்வு ஊதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இதை அடுத்து ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ஐம்பதாயத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்க இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கௌரி, ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலர்கள் என பல பங்கேற்றார்கள்.

Categories

Tech |