திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்குகிறது தலைநகர் சென்னை. இதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் கொரோனா பெருந்தொற்று விட்டு வைக்கவில்லை. இங்கு தொடர்ந்து அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 271 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 476 ஆக அதிகரித்திருக்கிறது. இன்று மட்டும் பூவிருந்தவல்லியில் 66 பேர், ஆவடியில் 50 பேர், சோழவரத்தில் 33 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 3,356பேர் குணமடைந்த நிலையில் 105பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.