திருவள்ளுவரை உருவம் எப்படி தோன்றியது என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்….
தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உரிமை படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்திருப்பது போல காட்சியளிக்கிறார் 1959 இந்த படம் வெளியிட பட்டு பரவலான பிறகு இந்த படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த படத்தையே அதிகார பூர்வ படமாக பயன்படுத்தபட வேண்டும் என அரசு ஆணைகள் வெளியிட பட்டன. இதன் பிறகு மிக அரிதாகவே அந்த படத்துக்கு மாறுப்பட்ட திருவள்ளுவரின் படங்கள் வரைய பட்டன.
முதன்முதலில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கப்பட்ட விதம்,
19 ஆம் நூற்றாண்டில் இருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துடங்கிவிட்டன.அந்த காலகட்டத்தில் சென்னை மாநகரத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் குறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் குறிக்கபட்டிருக்கும்.
இதில் திருவள்ளுவர் சமண முனிவரை போல் காட்சி அளிக்கிறார். இவரை உருவ படுத்தியவர்கள் இவரை சமண முனிவர் என்று கருதியுள்ளனர்.
1950 களில் பாலு சீனு என்ற சகோதரகள் கலை எனும் இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திவள்ளுவரின் படம் இடம் பெற்றிருந்தது. அந்த பபாத்தில் திருவள்ளுவர் எந்த மத சின்னமும் இன்றி இருந்தார்.
1950 ன் பிற்பகுதியில் தான் நாம் இப்பொழுது காணுகின்ற வெள்ளுடை உடுத்திய வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியை தொடங்கியவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிட கழகத்தை சேர்ந்த ராம செல்வன் என்பவருடன் சேர்ந்து வந்து ஓவியர் வேணுகோபால் ஷர்மாவை சந்தித்தார், மூவரும் சேர்ந்து திருவள்ளுவரின் படத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
திருவள்ளுவர் கருத்துலகில் சிந்தனை வாழ்வில் வாழ்ந்தவர் என்பதால் அவரை சுற்றி மரம் செடி வீடு இவை ஏதும் இல்லாமல் அவரை சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படி இவ்வுருவம் உருவாக்கபட்டது. தன்னுடைய சிந்தனை செயல் ஆடை ஆகியவற்றை அழுக்கு தீண்டாதபடி அவர் ஒரு சிறு மரப்பலகையில் அமர்ந்திருக்கும்படி அமைக்கப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றை கொண்டிருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்மை நிற ஆடை உடுத்தப்பட்டதாக கூறுகிறார் வேணுகோபால் ஷர்மா. பின்னல் வளர்க்க படும் குடுமியும் வெட்ட பட்ட சிகையும் பல இந குழுக்களுக்கு அடையாளமாகி விட்டதால் திமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது.
1960ல் சி.என்.அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்த படம் வெளியிட பட்டது. பிறகு இதே படம் மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.