கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அக்டோபர்-15 ம் தேதி வரை மூடப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் மக்களின் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் கேரளாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவனந்தபுரம் பத்மநாப கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.எனவே பத்மநாபசுவாமி கோயில் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடப்படும் எனவும் ,பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.