Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 2,692 சிறப்பு பேருந்துகள், 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஒன்பது ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி, ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் விழாவில் 12097 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |