தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. அதனால் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வார்கள்.
அப்படி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மதியம் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. அதில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 50 பேருந்துகளும் மீதமுள்ளவை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.