திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள்.
அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையங்களிருந்து கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்குச் சென்று பயிருக்கு தேவையான உரகங்களை விற்பனை நிலையம் கருவி மூலம் ரசீது பெற்று பயன் பெறலாம்.
விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கொடுத்து விரல் ரேகையை பதிவு செய்து மண் பரிசோதனை செய்தவன் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுபடி உரங்களை பெறலாம். விவசாயிகள் விரும்பாத மற்ற இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் புகாரின் அடிப்படையில் உர உரிமைகள் ரத்து செய்யப்படும். மாவட்டத்தில் தற்போது போதிய அளவு உரம் இருப்பில் இருக்கின்றது. ஆகையால் உரம் தட்டுப்பாடு என்ற வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.