திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டிசம்பர் 7ஆம் தேதி வரை 2700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.
சென்னையிலும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முடிவடைந்த நிலையில் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.