Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! அதிரடி காட்டிய வார்னர்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி …!!

டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 -வது சுற்றில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த சில மாதங்களாக பார்ம் அவுட்டில் தவிர்த்து வந்த டேவிட் வார்னர். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் பல போட்டிகளில் பெவிலியனில் காண முடிந்தது.

இதே நிலை டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு ஆபத்து எனக் கூறி வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டும். என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சிலர் ஆதரவும் அளித்து வந்தனர். ஆனால் ரசிகர்களின் கருத்துப்படியே தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆன முதல் போட்டியில் 15 பந்துகளுக்கு 14 ரன்கள் என சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினார்.

இதனால் அவருக்கு மேலும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் அவர் அடுத்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிகள் 42 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்து தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விமர்சனங்களை தவிடு பொடியாக்கி அசத்தினார். இதனால் அடுத்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிரி உள்ளது என்றே சொல்லலாம்.

Categories

Tech |