Categories
மாநில செய்திகள்

திருமா எங்களின் நட்பு சக்தியே!…. நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார்!…. பாஜக தலைவர் ஸ்பீச்…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தினை உருவாக்க பாடு படுகிறார் என்று பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இதனிடையில் திருமாவளவன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை எதிர்க்கலாம், எனினும் அவரும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான் பாடுபடுகிறார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திருமாவளவனை நட்பு சக்தியாகவே நான் பார்க்கிறேன்.

அவருக்கும், எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மிகக் கடுமையாக பேசிக் கொள்கிறோம். எனினும் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பாடுபடுகிறார். எங்கள் கட்சிகளிலும் கூட பட்டியலின தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட தலைவர்கள், வட இந்தியாவில் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Categories

Tech |