Categories
அரசியல்

“திருமாவுக்கு தில் இருந்தா ஸ்டாலினிடம் கேட்க சொல்லுங்க.!!” எல்.முருகன் காட்டம்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் “கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மக்களுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இதிகாசத்தில் உள்ள ராமாயணம் மகாபாரதம் போன்ற குப்பைகளை மக்கள் மூளையில் திணிக்கின்றனர் எனக் கூறினார். அதோடு இந்தியர்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிரிக்கின்றனர் எனவும் சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர் திருமாவளவன் பேசியிருந்தார். இந்நிலையில் விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இதிகாச குப்பைகள் என தொல் திருமாவளவன் கூறுவது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. சகோதரத்துவம், சமத்துவம் போன்ற கருத்துகளை ராமாயணமும் மகாபாரதமும் சிதைக்கின்றன என அவர் கூறியுள்ளார். இது முற்றிலும் பொய்யான கருத்து ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நல்நெறி இதிகாசங்கள் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர். தொல் திருமாவளவன் எந்த சுயநலமும் இல்லாமல் தான் அரசியல் செய்து வருகிறாரா.?

அவருடைய மனதில் எந்த சுயநலமும் இல்லை என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்.? நம்முடைய மாநிலமான தமிழ்நாட்டில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்.? இதுகுறித்து மு.க ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப திருமாவளவனுக்கு தைரியம் இருக்கிறதா.?” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |