Categories
சினிமா

“திருமண வயது” தியாகமும் வேண்டாம்…. பொறுப்புகளும் வேண்டாம்…. ஓவியா ட்விட்….!!

மத்திய அமைச்சரவை பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதான 18-ஐ  21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுப்பதற்காக பெண்களுக்கான திருமண வயது 18 என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தாலும் பக்குவமான முடிவுகளை எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் பிரசவத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும்  வலியுறுத்தியதை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்த தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகையான ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமண வயதை அதிகரிப்பது சரியான முடிவுதான். பலவற்றை சிறுவயதிலேயே தியாகம் செய்துவிட்டு தாங்க முடியாத பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய அவசியமில்லை. இதனை நான் உறுதியாக ஆதரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |