சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லப்பனஅள்ளி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வம் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று செல்வம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.