நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டைப் பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் கனா, வடசென்னை, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.