சத்யா சீரியல் நடிகை ஆயிஷா திருமணக்கோலத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆயிஷா. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவ்வப்போது நடிகை ஆயிஷா தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் திருமண கோலத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை ஆயிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.