Categories
மாநில செய்திகள்

திருமண அனுமதி பெற இனி….. “திருமணமாகாதவர்” என்ற சான்றிதழ் போதும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் திருக்கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இ சேவை மையம் மூலமாக வழங்கப்படும் திருமணம் ஆகாதவர் என்ற சான்றிணை சமர்ப்பித்தால் போதும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து திருக்கோவில்களின் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ் தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதரச் சான்றிதழ்களை கோரினால் அறநிலையத்துறையின் 044-28339999 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற, இதுவரை, இதர சான்றிதழ்களுடன், முதல் திருமண சான்றும் கோரப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் கோவில்களில் திருமணம் நடத்திட விரும்புபவர்கள் ‘திருமணமாகாதவர்’ என்ற சான்றை இ- – சேவை மையங்கள் வாயிலாக பெற்று, சம்பந்தப்பட்ட கோவில்களில் சமர்ப்பித்தால் போதும்.என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |