தனியார் நிதி நிறுவனங்களின் வாயிலாக செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களை அரசால் வழங்கப்படும் திட்டங்கள் நம் பணத்திற்கு பாதுகாப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் வாயிலாக திருமணமானவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கிறது. இத்திட்டம் மத்திய அரசால் 26 மே 2020 அன்று துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 31 மார்ச் 2023 வரையிலும் முதலீடு செய்யலாம். இந்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் இயக்கப்படுகிறது. 60 வயதை தாண்டிய தம்பதியர்கள் இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய்.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தொடக்கத்தில் ரூபாய்.7.5 லட்சமாக இருந்த அதிகபட்ச முதலீட்டு வரம்பு இப்போது 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்தகுடிமக்களுக்கு சிறந்த அடிப்படையில் பயனளிக்கும் திட்டமாக இது கருதப்படுவதால் மூத்தகுடிமக்கள் பலரும் இத்திட்டத்தில் சேருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 60 வயது (அல்லது) அதற்கு அதிகமானவர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தம்பதியர்கள் இரண்டு பேரும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் பட்சத்தில் ஒவ்வொருவரும் தனித் தனியாக ரூபாய்.15 லட்சம் என்ற கணக்கில் மொத்தமாக ரூபாய்.30 லட்சத்தை முதலீடாக செலுத்த வேண்டும். இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு 7.40 % வருடாந்திர வட்டி கிடைக்கும்.
இந்த சதவீத வட்டியின் வாயிலாக உங்களது முதலீட்டுக்குரிய ஆண்டு வட்டி ரூபாய். 2,22,000 ஆகும். இந்த வருடம் வட்டித் தொகையை 12 மாதங்களுக்கு சரிபாதியாக பிரிக்கும் போது ரூபாய்.18500 கிடைக்கிறது. இந்த ரூபாய்.18,500 முதலீட்டாளருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அத்துடன் தம்பதியரில் ஒருவர் மட்டும் முதலீடு செய்து கொள்ளும் ஆப்ஷனும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூபாய்.15 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுவட்டி ரூபாய்.111000 மற்றும் முதலீட்டாளருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ரூபாய்.9250 கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வுகாலம் மொத்தம் 10 வருடங்கள். முதிர்ச்சிக்கு பின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யலாம்.