Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கனும்….. கோவில் திருவிழாவில் சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…!!

சத்தியமங்கலம் கோவிலில் திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து  கோவிலில் கம்பம் நடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பிறகு மாலையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து கோட்டை முனியப்பன் கோவிலுக்கு தாரை, தப்பட்டை முழங்க பூசாரி, பக்தர்கள் வேல்களை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் அக்ரஹாரத்தில் பவானி ஆற்றில் உள்ள தனியார் மண்டபம் படித்துறைக்கு சென்று வேல்களை கழுவி அதற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பூ அனைத்தையும் வைத்து தாரை, தப்பட்டை முழங்க முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று வந்துள்ளனர்.

இந்த விழாவை ஒட்டி திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி ஆண்கள் ஆங்காங்கே நின்று நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். அதில் ஊர்வலத்தில் வந்த பக்தர் ஒருவர் தன்னிடம் உள்ள சாட்டையை நேர்த்திக் கடனுக்காக நின்ற பக்தர்கள் மீது அடித்த போது சில பக்தர்கள் சாமி ஆடினார்கள்.

இதனைத்தொடர்ந்து ஊர்வலத்தில் வேல்களை எடுத்து வந்திருந்த பக்தர்கள் மீண்டும் கோட்டை முனியப்பன் கோயிலுக்கு சென்று அந்த வேல்களை நட்டு வைத்தனர். அதன் பிறகு கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு நேற்று கம்பம் பிடிங்கி பவானி ஆற்றில் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், வருகின்ற 28-ஆம் தேதி மறுபூஜை நடைபெற்றது.

Categories

Tech |